நண்பர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஊரே கண் வைப்பது போல் இருக்கிறார்கள் சிம்பு, தனுஷ்.
தற்போது இவர்கள் நட்பை இன்னும் ஆழமாக்கும் பொருட்டு ஒரு விஷயம் நடக்கவுள்ளது.
சிம்பு தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு இவரது தம்பி குரளரசன் தான் இசையமைப்பாளர்.ஏற்கனவே இதில் யுவன் ஒரு பாடல் பாட, தற்போது தனுஷும் ஒரு பாடல் பாடவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.