18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவரது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின் போது மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயம் (Abdulla Yameen Abdul Gayoom) “தேர்தல் அறிவிப்பிற்கு வாழ்த்துக்கள். கடந்த காலங்களப் போன்று இம்முறையும் பெருமபான்மை வெற்றியுடன் மீண்டும் தெரிவுசெய்யப்படுவீர்கள் என்பது எங்களது மனமார்ந்த நம்பிக்கையும், பிரார்த்தனையும் ஆகும். இது உங்களுக்கு மிகப்பெரிய தடையாக எல்லாம் அமையாது” எனத் தெரிவித்தார்.
உச்சிமாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வின்போது தனது உரையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி (Narendra Modi), “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் (மீள்-தேர்வு) ஒன்றிற்குச் செல்லவுள்ளார். அவருக்கு நான் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
“என்னுடைய நல்வாழ்த்துக்கள் உங்களுக்குத் தேவையில்லை ஆனால் உங்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்” என இருதரப்புக் கலந்துரையாடல்களின் போது பூட்டானின் பிரதமர் லைன்சென் ஷரிங் தொப்கே (Lyonchhen Tshering Tobgay) தெரிவித்தார்.
“நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.”நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா (Sushil Koirala) அவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேச்சுக்களை நடாத்தியபோது அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முன்னாள் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான திருமதி.சுஜாதா கொய்ராலா (Sujata Koirala),”ஜனாதிபதியாக உங்களை மீண்டும் சந்திப்போம்” எனத் தெரிவித்தார்.