Ad Widget

மண்டேலா, மகாத்மாவின் வழியில் ஜனநாயகத்தை வென்றெடுப்பேன்! – மைத்திரிபால

“இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறினேன். நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கையைப் பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தை வென்றெடுப்பேன்.” – இவ்வாறு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithripala-sirisena

“ஜனாதிபதி மஹிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ, பண பலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் மாவட்ட , மாகாண அமைப்பாளர்களை சந்தித்திருந்தார். இதன்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடும் இந்த ஆட் சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து, 2015 இல் தேசிய அரசொன்றை அமைப்பதற்கு தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் மைத்திரிபால நேற்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.

Related Posts