“புலிகள் மீண்டும் உருவாக ஒருபோதும் இடமில்லை” – இராணுவ தளபதி

தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாவதற்கோ அல்லது அவர்களின் செயற்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளதற்கோ ஒருபோதும் இடமில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

Lt-General-Daya-Ratnayake

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இராணுவ தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் உருவாக இடமளிக்க மாட்டோம்.

சர்வதேச ரீதியில் சில அமைப்பினர் இணைந்து இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகவோ அல்லது செயற்படவோ முயற்சி செய்தால் நாட்டின் சட்டம் மற்றும் நீதி முறைகளுக்கு கீழ் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முப்படையினரும் பொலிஸாரும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவித குறைபாடுகளும் இல்லை.

அத்துடன், பொதுமக்களும் தமது ஒத்துழைப்பை எமக்கு வழங்கியுள்ளனர். யுத்தம் நிறைவடைந்த ஏனைய நாடுகளை எடுத்துப் பார்த்தால் இலங்கை போல அந்த நாடுகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை’ என அவர் மேலும் கூறினார்.

Related Posts