ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார சுவரொட்டி ஒன்றில் பரிசுத்த பாப்பரசரின் படம் பயன்படுத்தப்பட்டமைக்கு , தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் அந்த சுவரொட்டியை அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி ஏற்கனவே தனது தேர்தல் பிரசாரத்திற்கு பரிசுத்த பாப்பரசரின் படத்தை பயன்படுத்தியுள்ளார். கொழும்பின் பல இடங்களில் அவ்வாறான சுவரொட்டிகளை காணமுடிகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலின் தலைவர் ரோகண ஹெட்டியராச்சி தெரிவித்தார்.தேர்தல் கண்காணிப்பு அமைப்பு என்ற வகையில் நாங்கள் இந்த சுவரொட்டிகளை அகற்றுமாறு அதிகாரிகளை கேட்டுள்ளோம்.- என்றார்.
இதேவளை அந்த சுவரொட்டிக்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்புமில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளில் பரிசுத்த பாப்பரசரின் படத்தை பயன்படுத்தவில்லை. எமது பிரசாரத்தில் பாப்பரசரின் படத்தை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.