ராஜபக்ஷக்களின் ப(f)யில்கள் வெளியில் எடுக்கப்படும் – சந்திரிக்கா மிரட்டல்

தான் ஆதரவு வழங்கும் குழு அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ராஜபக்ஷக்களின் ப(f)யில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

maithripala_sirisena_chandrika_kumaratung

கட்சியை விட்டுச் செல்லும் நபர்களின் ப(f)யில் தாங்கள் வசம் இருப்பதாகவும் ஆனால் அதனைக் கொண்டு பழிவாங்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க மேடையில் தெரிவித்தார்.

நேற்றய தினம் மைத்திரிபால சிறிசேன ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதிக்குச் சென்றிருந்த வேளை சந்திரிக்காவும் அங்கிருந்தபோது ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சந்திரிக்கா குமாரதுங்க ´எங்களது ஆட்கள் வந்ததும் ராஜபக்ஷக்களின் பயில்களை இழுப்போம். இப்போதைக்கு அது போதும். இது குறித்து இனி கேள்வி கேட்க வேண்டாம்´ என தெரிவித்து அவ்விடத்தைவிட்டு சென்றுள்ளார்.

Related Posts