ஜனாதிபதி நேபாளம் சென்றடைந்தார்!

18 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் காத்மண்டு நோக்கி பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை நேபாளம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

mahinda_rajapaksa

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சார்க் அமைப்புக்களின் 18 ஆவது மாநாடு மூன்றாவது தடவையாக இம்முறை காத்மண்டுவில் இடம்பெறவுள்ளது. 1987 ஆம் ஆண்டு முதல் தடவையாக நேபாளத்தில் இடம்பெற்ற இம் மாநாடு 2002 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் என மூன்றாவது தடவையாக நேபாளில் இடம்பெறுகிறது.

ஆரம்பநிகழ்வில் நாளை (26) கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி இரண்டாவது நாள் நிகழ்விலும் பங்குகொள்வார். இவற்றுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற்பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ நேபாளத்திலுள்ள புனித இடங்களுக்கு விஜயங்களினையும் மேற்கொள்ளவுள்ளனர்.

அவ்வகையில் புத்தபெருமானின் பிறந்த தேசமான லும்பினிக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அங்கு புதிதாக அமைக்கப்பட்ட பாலம், துட்டகைமுனு யாத்திரிகர்களின் ஓய்வு விடுதி, பௌத்த பல்கலைக்கழகத்தின் நிதிப்பிரிவு கட்டங்கள் ஆகியன ஜனாதிபதி ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. மாயாதேவி ஆலயம், சிறிலங்காராமய ஆலயங்களுக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் இம்மாநாட்டின் போது ஜனாதிபதி மற்றைய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்

இம்மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related Posts