சர்வாதிகாரத்தை உடைப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் டிசெம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதேவேளை ஹொரகொல்லையில் அமைந்துள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் சமாதிக்கு, மைத்திரிபால சிறிசேன, இன்று மலர் அஞ்சலி செய்தார்.
ஜனாதிபதி தேர்தல் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பநிலைத் தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெறும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பண்டாரநாயக்கவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.