8ஆவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேபாளத்தின் காத்மண்டுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை முதல் நாளைமறுதினம் வியாழக்கிழமைவரை நடைபெறவுள்ளது.
காத்மண்டுவில் மூன்றாவது தடவையாக 18ஆவது சார்க் உச்சி மாநாடு நடைபெறுகின்றது. முதலாவது தடவையாக 1987ஆம் ஆண்டும் இரண்டாவது தடவையாக 2002ஆம் ஆண்டும் காத்மண்டுவில் இந்த மாநாடு நடைபெற்றது.