ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மஹிந்த ராஜபக்ஷ முன்வருவாரானால் அவருக்கு எமது ஆதரவை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
குருநாகலவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தில் அவசர சட்டமூலமாக 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றமுடியும். அவர் அப்படிசெய்வாரானால் ஐக்கிய தேசியக் கட்சி மஹிந்தவுக்கு தனது பூரண ஆதரவை வழங்கும். இந்த திருத்தத்தை ஜாதிக ஹெல உறுமயவும் ஐ.தே.கவும் முன்மொழிந்தன. எனவே இருதரப்பும் தமது ஆதரவை வழங்கும். இதற்காக நான் இந்த பொது இடத்தில் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கிறேன்.- என்றார்.