ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அரசு பக்கம் மாறப்போகிறார் என முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்கவே கட்சி தாவப் போகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக் காலமாக கட்சியின் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டாத இவர் முக்கிய கூட்டங்களிலும் கலந்து கொள்வதில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்ற. திஸ்ஸ அத்த நாயக்க சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் திஸ்ஸ அத்தநாயக்கவை தொடர்பு கொள்ள ஐ.தே.கவினர் பல தடவைகள் முயற்சித்த போதும் அது கைகூடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமது கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரி பால சிறிசேனவை எதிரணியினர் தம் பக்கம் இழுத்துக் கொண்டமைக்குப் பதிலாகவே திஸ்ஸ அத்தநாயக்கவை அரச தரப்பினர் தம் பக்கம் இழுத்துக் கொள்ளவுள்ளனர் எனக் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.