குழந்தை திருமணத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அரசுகளுக்கு ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.
பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், குழந்தை திருமணத்தை தடுக்க முடியும் என்றும் ஐ.நா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், ஆண்டுக்கு உலகம் முழுவதும் ஒன்றரை கோடி குழந்தை திருமணங்கள் நடப்பதாகவும், 70 கோடி பெண்கள் 18 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கைகள் ஏதும் எடுக்காவிடில், 2050 க்குள் 120 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் வங்காளதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தான் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடப்பதாக குழந்தைகள் உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே இதற்கான கட்டுப்பாடுகளை உடனே கொண்டுவரவும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடா மற்றும் சாம்பியா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே குழந்தை திருமணத்தை தடை செய்வதற்கான சட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.