ரணிலுக்கு தற்போது இரண்டு மைத்திரிகள் உள்ளனர். ஒருவர் வீட்டுக்குள் இருக்கும் அவரது மனைவி, மற்றவர் வெளியே. அவர்தான் மைத்திரிபால. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவரின் மனைவி மைத்திரியையும், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையுமே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி வேறுவழியின்றி சிறிலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த ஒருவரையே பொதுவேட்பாளராக நியமிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது திஸ்ஸ அத்தநாயக்க எமது கட்சிக்கு வந்து போட்டியிடுவதை போன்றது. சரத் பொன்சேகா போன்று மைத்திரி சிக்குப்பட்டுள்ளார். – என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்