Ad Widget

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார்

எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.    குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.    இன்று மாலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட போதே இவ்வாறு கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக மக்கள் கட்சியின் அர்ஜூன ரணதுங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

நான் ஜனாதிபதியானால், ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக்குவேன் . ஜனாதிபதியாகி 100 நாட்களுக்குள், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்றும் மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.

Related Posts