சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசின் அமைச்சருமான மைத்திரிபால பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை சமரசப்படுத்தி தன்வசப்படுத்த மஹிந்த அவரச நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் மைத்திரிபாலவை அழைத்து மஹிந்த அவசரமாகக் கலந்துரையாடி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சந்திப்பு நிறைவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றும் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால இன்று வெள்ளிக்கிழமை தமது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு எதிரணியின் பக்கம் சேருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.