நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மஹிந்தவே நிற்பார் என அக்கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது என அறவிக்கப்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு நேற்று புதன்கிழமை நள்ளிரவு கூடியது. இதன்போது கட்சியின் மூத்த உப தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரைப் பரிந்துரைத்தார்.
இதனை பிரதமர் டி.எம்.ஜயரட்ண வழிமொழிந்தார். ஜனாதிபதி தேர்தலுக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட மட்டங்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இதேசமயம் ஜனாதிபதி தேர்தலுக்கான சிறப்பு வர்த்தமானி இன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.