2013-2014 ஆம் ஆண்டு வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிக்கவும்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரி செலுத்துபவர்கள் 2013-2014ஆம் ஆண்டுக்குரிய வரி விபரத்திரட்டுக்களை, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என, உள்நாட்டு இறைவரி திணைக்கள யாழ். பிராந்திய அலுவலக பொறுப்பு உதவி ஆணையாளர் திருமதி.சு.சர்வேஸ்வரன் செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாழ்ப்பாண அலுவலகத்தில் வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிக்கலாம்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், எதிர்வரும் 29ஆம் திகதி கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக கட்டத்தொகுதி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள, விசேட கருமபீடத்தில் வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிக்க முடியும்.

அத்துடன், இதுவரை காலமும் ஏனைய பிராந்திய அலுவலகத்திலோ, கொழும்பு காரியாலயத்திலோ வரி கோவைகளை பேணுபவர்களும் வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிக்க முடியும்.

வரி விபரத்திரட்டுக்களுடன் அதனை பூரணப்படுத்துவதற்கான ஆவணங்களையும் எடுத்து வரவேண்டும்.

அத்துடன், முன்னைய வருடங்களுக்குரிய வருமானவரி விபரத்திரட்டுக்கள், தேசத்தைக்கட்டியெழுப்பும் வரி விபரத்திரட்டுக்கள் ஆகியவை சமர்ப்பிக்கப்படாதிருப்பின் அவற்றையும் சமர்ப்பித்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

புதிய வரிக்கோவைகள் திறக்க விரும்புவோர், வரிதொடர்பான விளக்கங்கள் பெற விரும்புவோரும் யாழ் அலுவலகம், மற்றும் விசேட கரும பீடங்களுக்கு சமூகமளித்து விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts