சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஜே.வி.பி. யினர் நேற்று கொழும்பில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்புடன் இணைந்து ஜே.வி.பி. யினர் மேற்கொண்ட குறித்த பேரணி நேற்று மாலை மருதானை ஆனந்த கல்லூரி அருகில் ஆரம்பித்து, புறக்கோட்டை பரடைஸ் மைதானத்தில் முடிவடைந்திருந்தது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம், சர்வாதிகார ஆணவம் வேண்டாம், போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த பேரணி காரணமாக மருதானை முதல் புறக்கோட்டை வரையான பாதைகளில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன்.