திவுலபிட்டி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து இன்று (17) விலகியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனத்தையும் மீளளித்துள்ளதாகவும் அரசாங்கத்திற்குள் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயலாற்ற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் இவை அனைத்தையும் செய்வது அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டுவருவதற்கே என தெரிவித்த தேரர், ஜாதிக ஹெல உறுமயவின் யோசனைகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அப்படி செய்யாவிட்டால் நிச்சயமாக பொது வேட்பாளர் மூலம் அரசாங்கத்தை தோற்கடிக்க செயற்படுவதாக அத்துரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டார். அதனால் மிக விரைவில் அரசியல் யாப்பு மாற்றத்தை செய்யுமாறு தான் அவசியத்துடன் கேட்டுக் கொள்வதாகவும் இது குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு இன்று கூடி முடிவெடுக்கும் என்றும் தேரர் தெரிவித்தார்.