இராக்கில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளுக்கு எதிராக அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் வான் தாக்குதல்களை ஆரம்பித்ததன் பின்னர் முதல் தடவையாக அமெரிக்க இராணுவத்தின் மிக மூத்த அதிகாரியான ஜெனரல் மார்டின் டெம்ப்ஸி இராக் சென்றுள்ளார்.
அமெரிக்கப் பங்களிப்பு எந்த அளவுக்கு பலன் தந்துள்ளது என்பதை தான் மதிப்பிட விரும்புவதாக ஜெனரல் டெம்ப்ஸி கூறினார்.
இதேவேளை, இராக்கின் மிகப்பெரிய பெய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்திலிருந்து இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை விரட்டிவிட்டு உள்ளே நுழைந்திருப்பதாக அரச ஆதரவுப் படைகள் கூறுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை அரச படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்த பெய்ஜி நகரின் வடக்குப் பகுதியில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகம் இருக்கின்றது.
இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள், வடக்கு இராக் ஊடாக கடந்த ஜூனில் நடத்திய அதிரடி முன்னேற்ற நகர்வு மூலம் பெய்ஜியைக் கைப்பற்றி இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் முற்றுகைக்குள் வைத்திருந்தனர்.