புழக்கத்தில் உள்ள பத்து ரூபா தாள்களுக்குப் பதிலாக நாணயக்குற்றிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நாளை மறுநாள் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் 25 வகையான டிசைன்களில் இந்த நாணயக்குற்றிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வும், பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெறும் இந்த விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பத்து ரூபா தாள்கள் படிப்படியாக புழக்கத்தில் இருந்து அகற்றிக் கொள்ளப்படவுள்ளது.