தரம் 5க்கான வெட்டுப்புள்ளி திங்கள் வெளியீடு

தரம் ஐந்து புலமைப் பரீட்சைக்கான புதிய வெட்டுப்புள்ளிகள், எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

bandula_gunawardena300px

சிங்கள மொழிமூல மாணவர்களுக்கான ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளி 163இலிருந்து 157ஆகவும், தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 159இலிருந்து 152ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் உதவித் தொகை பெறுவோரின் எண்ணிக்கை, 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும் எனவும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவும் திட்ட முன்மொழிவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Related Posts