கண்ணிவெடி அகற்றும் பணிகள் இன்னமும் முற்றுப்பெறவில்லை!

இலங்கையில் ஆபத்தான பகுதி என அடையாளமிடப்பட்டுள்ள பகுதியில் 78.8 சதுரகிலோமீற்றர் பகுதியில் இன்னமும் நிலக்கண்ணிவெடிகள் அகற்ற வேண்டியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ.

Ravinatha Aryasinha

ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

நிலக்கண்ணி வெடிகளால் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நாடுகளுடன் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இலங்கை தயாராகவுள்ளது.

இலங்கை 5 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளது. இதில் 2500 சதுர கிலோமீற்றர் பகுதி அதிக ஆபத்தான பகுதி என அடையாளப்படுத்தப்பட்டு அவற்றிலிருந்து கடந்த 5 வருட காலப்பகுதியில் 1,128,336 வெடிபொருட்களை அகற்றியுள்ளோம்.

இவ்வருடம் மாத்திரம் 55,762 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் 75 வீதமான பணிகளை இராணுவமே முன்னெடுக்கின்றது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts