எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஏதேனும் வெள்ளிக்கிழமையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் மிக கடுமையாக எதிர்க்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இத்தேர்தலை எதிர்வரும் ஜனவரி 02 அல்லது 03 அல்லது 07 ஆம் திகதியில் நடத்த ஜனாதிபதியின் சோதிடர்கள் சிபாரிசு செய்து உள்ளனர்.
ஜனவரி 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகும். இத்தினத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவர். எனவே 03 அல்லது 07 ஆம் திகதியில் தேர்தலில் தேர்தலை நடத்துவது உசிதம் என்று அரச தரப்பும் யோசிக்கின்றது.
இதே நேரம் ஜனவரி 15 அல்லது 21 இல்கூட தேர்தலை நடத்தலாம் என்று சோதிடர்கள் ஆலோசனை கூறி உள்ளனர்.
கடந்த தடவை உள்ளூராட்சி தேர்தல் ஒன்றை வெள்ளிக்கிழமை நடத்த அரசு எடுத்த முயற்சி முஸ்லிம் சமூகத்தால் மிக கடுமையாக எதிர்க்கப்பட்டது.
அத்துடன் தேர்தல் வெள்ளிக்கிழமை நடக்குமாக இருந்தால் தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்ற முஸ்லிம் ஊழியர்கள் பாரிய இடைஞ்சல்களை எதிர்கொள்வார்கள் என்பதும் யதார்த்தமான விடயமே ஆகும்.