இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் துவங்கி 150 ஆண்டு ஆகியுள்ளதை கொண்டாடும் இந்நாளில் இந்த போட்டி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண வந்திருந்தனர்.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.
50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். மொத்தம் 173 பந்துகளை சந்தித்த அவர், 33 பவுண்டரிகளும், 9 சிக்சர்களையும் விளாசி 264 ரன்கள் குவித்தார்.
இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 43.1 ஓவர்களில் ரோஹித் சர்மா எடுத்த 264 ரன்களுக்கும் குறைவாக 251 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் கேப்டன் மேத்யூஸ் மட்டுமே அதிகபட்சமாக 75 ரன்களை எடுத்தார். திரிமன்ன 59 ரன்களையும் திசர பெரேரா 29 ரன்களையும் தில்ஷன் 34 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணியில் தவால் குல்கர்னி 10 ஓவர்கள் வீசி 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பின்னி 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டார்.
ஒருநாள் போட்டியில் அதிக ஒட்டங்களை எடுத்த முதல் 15 வீரர்கள்