ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் முகநூல் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்கள் நேற்று (11) முகநூல் மற்றும் மின்னஞ்சலுக்குள் ஊடுருவல் செய்து முடக்கியுள்ளதாக ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இது ஊடுருவல் நிறுவனங்களால் அல்ல. தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரத்தன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதியை முறையை ஒழிக்கும் 19வது அரசியல் அமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ரத்தன தேரர் பிரசாரத்தை தீவிரமாக முன்கொண்டு செல்கிறார். அத்துடன் இன்று (12) இது தொடர்பான கூட்டம் ஒன்றும் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.