இந்தியாவிடமிருந்து இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்ததா என்பது தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு பணித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகொரளை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக எழுந்த, தலதா எம்.பி, இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்விகளை கேட்கின்ற போதும் அவர் பதிலளிப்பதில்லை என்று சுட்டிக்காட்டினார். இதனையடுத்தே சபாநாயகர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதலளிக்குமாறு பணித்தார்.