சமுர்த்தி வங்கிக்கு தீ சந்தேக நபர் கைது, வங்கி அதிகாரி தலைமறைவு!

வவுனியா, சின்னபுதுக்குளம் சமுர்தி வங்கிக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வங்கியில் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வங்கி தீ வைப்பு சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கியில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை மறைக்கும் பொருட்டு அங்குள்ள அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து இந்த தீ வைப்பு நடவடிக்கையில் இவர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வங்கியின் அதிகாரி தற்பொழுது ஊரிலிருந்து தலை மறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்தி

வவுனியாவில் சமுர்த்தி வங்கி ஆவணங்கள் தீக்கிரை!

Related Posts