ஸ்ரீல.சு.கட்சி இன்று பெரும் சக்தி பெற்றுள்ளது.ஸ்ரீல.சு.கட்சியின் வெற்றிக்கு எப்போதும் மகளிரின் ஒத்துழைப்பு எமக்கு துணைசெய்தது.இவ்வளவு பலமான மகளிர் அமைப்பு கட்சி வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிராம சேவை பிரிவு மட்டத்திலான மகளிர் பிரதிநிதிகள் 5000 பேர் பங்குபற்றிய மாநாடு அலரி மாளிகையில் நடைபெற்றது.61 தேர்தல் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதிநிதிகள் இதில் பங்குபற்றினர். இந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத்தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 28 தேர்தல்களில் தொடராக வெற்றிகளைக் கொண்டாடிய ஐ.ம.சு.மு 29வது தேர்தலிலும் வெற்றி நடைபோடவுள்ளமை உறுதி.ஆனால் எதிர்க்கட்சியோ இன்னும் வேட்பாளரைத் தேடிக்கொண்டிருக்கிறது.
அன்றைய காலங்களில் எனது வெற்றிக்காக பலர் உழைக்க முன் வந்த போதும் கட்சிக்குள் எனக்கு ஒத்துழைப்பு அங்கீகாரம் கிடைக்கவில்லை தேர்தல் விளம்பரம் ஒன்றை அச்சிட்டுத்தரவும் கட்சி முன்வரவில்லை எமக்கான உதவிகளைச் செய்வதிலிருந்தும் தூரமான கட்சி கதவுகளைப் பூட்டிக் கொண்ட போதும் நான் தயங்கவுமில்லை கட்சியிலிருந்து விலக முடிவு எடுக்கவுமில்லை.
வெற்றி,தோல்விகளை அநுபவித்தவன் நான். இந்த வகையில் எவரையும் பழிவாங்க நான் இடம் வைக்கவில்லை.அதன் விளைவாக ஸ்ரீல.சு.கட்சி இன்று பெரும் சக்தி பெற்றுள்ளது.
ஸ்ரீல.சு.கட்சியின் வெற்றிக்கு எப்போதும் மகளிரின் ஒத்துழைப்பு எமக்கு துணைசெய்தது.இவ்வளவு பலமான மகளிர் அமைப்பு கட்சி வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, திஸ்ஸ கரலியத்த, பவித்ரா வன்னி ஆராய்ச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே. ஆர். பீ. சூரியப்பெரும, கமலா ரணதுங்க, தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.