கொழும்பு நகரை அழுகுபடுத்தும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கோட்டை புகையிரத நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சந்தை தொகுதிகள் சில சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் . நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த மிதக்கும் சந்தையில் 92 விற்பனைக் கூடங்களுடன் பூங்கா, பொழுது போக்கு இடம் என்பனவும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே குறித்த மிதக்கும் சந்தையின் கடைகள் சில சரிந்து நீரில் முழ்கியுள்ளதொடு, மேலும் சில கடைகள் சரியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.