கமல் பிறந்த நாள்.. பேஸ்புக்கில் கலைநயமான போட்டோ

கமல்ஹாசன் இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பெயரில் வெளியாகும் பேஸ்புக்கின் கவர் போட்டோவில் இதையொட்டி கலக்கலான படத்தை அப்டேட் செய்துள்ளனர். தமிழ்த் திரையுலகின் பிதாமகர்களில் ஒருவரான கமல்ஹாசன் தனது 60வது பிறந்த நாளைக் இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி ரசிகர்கள் நலப் பணிகளுக்குத் தயாராகி வருகின்றனர்.

kamal-1

kamal-2

நாட்டைச் சுத்தம் செய்யும் பணியில் தங்களை நாளை ரசிகர்கள் ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் பெயரில் வெளியாகும் பேஸ்புக்கின் கவர் போட்டோ கலக்கலாக மாறியுள்ளது. 60 கமல்ஹாசனின் உருவத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த கலை நயம் மிக்க ஓவியம் கமல்ஹாசன் பேஸ்புக் அட்டையை அலங்கரிக்கிறது.

Related Posts