இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தி.மு.ஜயரத்ன, இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காகச் சென்றார். இந்நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அங்கு கூடி, கருப்புக்கொடி காட்டிய மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த, ஐந்து மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றத்தினார் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பிரதமர் திருப்பதி சென்றுள்ளார். அவர், திருப்பதி சென்று திரும்பும் வரை, ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து திருமலை வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு அகற்றும் படையினரும் மோப்ப நாய் பிரிவினரும் திருமலை மலை பாதையில் நேற்று முதல் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
திருப்பதி சென்ற பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்ட ம.தி.மு.க.வினர் முடிவு செய்து, திருத்தணியில் இருந்து திருப்பதி வரை பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது ஊர்வலமாக புறப்பட்ட 100க்கும் மேற்பட்ட ம.தி.மு.க ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.