இலங்கையை எச்சரிக்கிறது அமெரிக்கா!

ஐக்கிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை மௌனமாக்க முனையும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

keith-harper-amerecca

ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது என்பதை இலங்கை விளங்கிக்கொள்ளவேண்டும் என ஐ.நா. மனித உரிமை கவுன்ஸலுக்கான அமெரிக்க பிரதிநிதி ஹெய்த் ஹார்ப்பர் டுவிட்டர் செய்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ..நா. மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த விசாரணைகளில் அந்த அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க முயல்பவர்களை அச்சுறுத்தி மௌமாக்க முயல்வது குறித்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகநாடுகளின் தூதுவர்களை சந்தித்தவேளை, வன்னியில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் திரட்டி ஐ.நாவுக்கு அனுப்ப முயன்றவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்ததன் பின்னணியிலேயே அமெரிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

Related Posts