தமிழ் சினிமாவின் வெற்றி பிரதர்ஸ் என்றால் சூர்யா-கார்த்தி தான்.
ஆனால், சில நாட்களாக இவர்களது படங்கள் முன்பு போல் ஹிட் ஆவது இல்லை.மெட்ராஸ் படம் கார்த்திக்கு சுமாரான வெற்றியை தந்தது. அஞ்சான் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் சூர்யா அடுத்து மாஸ் படத்திலும், கார்த்தி காஷ்மோரோ என்ற படத்திலும் நடிக்கவுள்ளனர்.இந்த இரண்டு படமும் ஆவி சம்மந்தப்பட்ட கதை தான் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
ஒரே நேரத்தில் அண்ணனும், தம்பியும் பேய் சார்ந்த கதையில் நடிப்பது என்ன செண்டிமெண்டோ தெரியவில்லை.