நிவாரண பொருட்கள் சேகரிப்பதை நிறுத்தவும் – மாவட்ட செயலாளர்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் அதிகளவான நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தனக்கு கூறியதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

இது தொடர்பில் மாவட்ட செயலாளர் மேலும் கூறுகையில்,

அனைத்து பிரதேசங்களிலும் இருந்து அம்மக்களுக்கு நிவாரண பொருட்கள் சென்றுள்ளமையால் உணவு, உடை மற்றும் பால்மா வகைகள் பெருமளவில் கிடைத்துள்ளதுடன் அவை அம்மக்களிற்கு தற்போது போதுமாக இருக்கின்றன.

ஆகையால் யாழ்.மாவட்டத்தில் தனிப்பட்ட ரீதியில் பொருட்கள் சேகரிப்பில் ஈடுபடுபவர்கள் அவ்வாறு பொருட்கள் சேகரிப்பில் ஈடுபடவேண்டாம்.

அத்துடன், அவ்வாறு உதவிகள் செய்ய முற்படுபவர்கள் அம்மக்களின் நீண்டகால தேவைகளுக்கு உதவி செய்ய முடியும்.

அம்மக்களின் நீண்ட கால தேவைகள் என்ன என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் பதுளை மாவட்ட செயலாளர் றோகண திஸநாயக்க எங்களுக்கு அறிவிப்பார். அதன்பிறகு அத்தேவைகள் குறித்த நாங்கள் வெளியிடுவோம்.

அவ்வேளையில் அத்தேவைகளை நிவர்த்தி செய்து கொடுக்க விரும்புபவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்.

அம்மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, அவர்களுக்கான நீண்டகால தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் தற்போது ஏற்பட்டுள்ளன.

அவ்வாறு நீண்டகால தேவைகளை நிவர்த்தி செய்ய விரும்புபவர்கள் என்னுடன் தொடர்புகொண்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்துதரமுடியும்.

மேலும், பதுளை மாவட்ட செயலாளருடனும் நேரடியாக தொடர்புகொண்டு நீண்டகால தேவைகளை அம்மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க முடியும் எனவும் யாழ். மாவட்ட செயலாளர் மேலும் கூறினார்.

Related Posts