பதுளையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள மீரியபெந்த தோட்டத்தை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை கொஸ்லாந்தை பகுதிக்குச் சென்றார்.
அங்கு சென்ற ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, ஊவா மாகாண சபை முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி, நிலச்சரிவு காரணமாக அநாதையான பல குழந்தைகளின் நலன்களைக் கவனிக்குமாறும் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை அதிகாரிகளைப் பணித்தார்.