தற்போதெல்லாம் டுவிட்டரில் பிரபலங்களுக்கு மரியாதை என்பதே இல்லை. அவர்கள் யாரும் தங்கள் சொந்த கருத்தை தெரிவிக்க முடியவில்லை.
அதேபோல் சமீபத்தில் கத்தி படம் எந்திரன் படத்தை வசூலை முறியடித்தது என முருகதாஸ் கூற, டுவிட்டரில் உள்ள ரஜினி ரசிகர்கள் எல்லாம் விஜய்யையும், முருகதாஸையும் தாக்கி கமெண்ட் போட ஆரம்பித்து விட்டனர்.
இதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்களும் மிகவும் கடுமையான வார்த்தைகளால் தாக்கி டுவிட் செய்ய சில மணி நேரங்களில் டுவிட்டரே போர் களம் ஆனது.