நெல்லியடி மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நெல்லியடி கரவெட்டி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கரவெட்டி கிழக்கு, காட்டுப்புலத்தைச் சேர்ந்த வேலன் சின்னப்பிள்ளை (வயது 70) என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை – பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதிரி அல்வாய் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
தேவரையாளி அல்வாயைச் சேர்ந்த மார்க்கண்டு தர்மரட்ணம் (வயது 66) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட இரு சடலங்களும் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.