Ad Widget

சிரியாவில் அமெரிக்க வான் தாக்குதலுக்கு 553 பேர் பலி

சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் இந்த மாதத்தில் மட்டும் (23.10.14) வியாழன் கிழமை வரை 521 சிரியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் 32 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலுள்ள சிரியா கண்காணிப்புக் குழு மற்றும் மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது.

sereya-amerecca-

சிரியா மற்றும் ஈராக்கில் அந்நாட்டு ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள சில பகுதிகளை கைப்பற்றி அதனை இஸ்லாமிய தேசங்களாக அறிவித்து வருகின்றன. இதனை எதிர்த்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 553 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 521 சிரியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் 32 பொதுமக்களும் அடங்குவர். இந்த தாக்குதலில் மேலும், 57 அல்-கொய்தா தீவிரவாதிகள், ஒரு குழந்தை மற்றும் 5 பெண்கள் உட்பட 6 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது விதியின் கீழ் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க தனது தரப்பை நியாயப்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த உள்நாட்டுப் போரில் மட்டும் 2 லட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Related Posts