நீங்கள் விரும்புகின்ற அல்லது நேசிக்கின்ற ஒன்றின் மீது தீராத ரசிகனாக இருப்பதில் தவறொன்றும் இல்லை.ஆனால் வெறியனாக இருப்பதில் தான் விபரீதங்கள் நேர்கின்றன.அண்மைய நாட்களில் கத்தி திரைப்படம் மூலமாக நாம் அறிந்த தெரிந்த விடயங்கள் வேதனையை கொடுத்து நிற்கின்றன.
ஒரு சமுதாய விழிப்புணர்வாகவும் இனிவரும் நாட்களில் நாம் இவ்வாறனவற்றை தவிர்ப்பது வேண்டாத உயிர்ப்பலியை தவிர்க்கும் என்பதற்காகவும் இதனை உங்களோடு பகிர்கின்றோம்.
இந்தியாவின் பாலக்காட்டை அடுத்த வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயபாரத் திரை அரங்கில் ஒருவர் “கத்தி” திரைப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த விஜயின் காட்சிப்பலகைக்கு பாலாபிஷேகம் மேற்கொள்ள முனைந்து தவறி விழுந்ததில் மரணமடைந்திருந்தார்.
இதேபோன்றொரு இன்னொரு சம்பவமும் பதிவாகியிருக்கின்றது.சென்னையை அடுத்த திருநின்ற ஊரில் நடிகர் விஜயின் கத்தி படம் ரசிக்க வந்த ரசிகர்கள் மோதலால் திரையரங்கு உரிமையாளர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
திரையரங்கு முன்னால் ரசிகர்கள் இரு பிரிவினராக பிரிந்து மோதலில் ஈடுப்பட்டனர். மோதலைத் தடுக்க முயன்ற திரையரங்கு உரிமையாளர் கிருஷ்ணன் கூட்டத்திற்குள் மாட்டிக்கொண்டார். இரு தரப்பினரிடமும் மாட்டிக்கொண்ட கிருஷ்ணன் பலத்த தாக்குதலுக்கு ஆளாகி மரணமானார்.
இளையதளபதி விஜய்யின் “கத்தி” திரைப்படம் சர்ச்சைகள் தாண்டி இப்போது திரைக்கு வந்து தீபாவளி விருந்து படைத்தாலும்,இச்சந்தர்ப்பத்தில் இரண்டு உயிர்கள் அநியாயமாய் காவுகொள்ளப்பட்டமை கவலையே!
விரும்பும் ஒன்றில் ரசிகனாய் இருந்து ரசிப்போம் ,
வெறியனாய் இருப்பதை மட்டும் வேரோடு ஒழிப்போம்.