போராட்டம் தொடரும்- அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.

poraddam-univer

இந்தநிலையில் தமது போராட்டத்துக்கு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ளப் போவதாக ஒன்றியம் அறிவித்துள்ளது.

இறுதியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒன்றியத்தினர் நடத்திய போராட்டத்தின்மீது நாடாளுன்ற பிரதேசத்தில் வைத்து கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் இவ்வாறான செயற்பாடுகள் தமது போராட்டத்துக்கு தடைகளை ஏற்படுத்தாது. தனியார் பல்கலைக்கழகங்களை மூடவேண்டும், மாலபே தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் 5000ரூபா புலமைப் பரிசில் நிறுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்கலைக்கழக பட்டங்கள் பணத்துக்கு விற்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளையே மாணவர்கள் முன்வைத்துள்ளனர். இதேவேளை கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தியெய்தாதவர்களும் 12 மில்லியன் ரூபாய்களை செலவழித்து பட்டம் பெறும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமது போராட்டத்தின்போது நேற்று முன்தினம் பொலிஸார் நடத்திய தாக்குதலில் 12 மாணவர்கள் காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts