பாகிஸ்தான் அகதிகள் மீது நீர்கொழும்பில் தாக்குதல்!

நீர்கொழும்பில் நேற்று மாலை பாகிஸ்தானிய அகதிகள் மீது ஒரு குழுவால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதில் 09 பாகிஸ்தான் அகதிகள் காயப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அகதிகளில் ஒரு இளைஞனுக்கு கடற்கரையில் உள்ளூர் இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட தர்க்கமே தாக்குதலுக்கு காரணம் ஆனது.

உள்ளூர் இளைஞனின் ஆட்கள் திரண்டு வந்து அகதிகள் தங்கி இருந்த தேவாலயத்தை முற்றுகையிட்டு தாக்கினர்.

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடி தலைமறைவான நிலையில் பொலிஸார் இவர்களை தேடிப் பிடிக்கின்ற நடவடிக்கைகளை முடுக்கி உள்ளார்கள்.

Related Posts