வடக்கு மாகாண முதலமைச்சரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள சொற்பொழிவு ஒன்றிற்கு வருமாறு மனித உரிமை அமைப்பு கடந்தவாரம் அழைப்பு விடுத்துள்ளது.
எனினும் இந்தியா செல்வது குறித்து இன்னும் தீர்மானிக்வில்லை என்று முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குழு இந்தியா சென்றதுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து இருந்தததுடன் பிரதமர் மோடியையும் சந்தித்து இருந்தனர்.
இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனைச் சந்திக்க மோடி விருப்பம் தெரிவித்திருந்தார். எனவே விரைவில் இருவரது சந்திப்பும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.