மூவின மக்களும் இணைந்து போராட வேண்டும் – மாவை

முஸ்லிம்கள், மலையக மக்கள் மற்றும் தமிழர்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

mavai mp in

தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட கிளை மாநாடு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது. இந்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மாவை இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் மக்களுடன் மற்றய மக்களின் உரிமைகளையும் அங்கீகரித்து சமஷ்டி முறையிலான தீர்வொன்றை நாங்கள் பெறுவோம். தமிழ் மக்கள் தோற்றுப்போனவர்கள் அல்ல. ஜனநாயக ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தமிழ் மக்கள் தோற்கடித்து வருகின்றார்கள்.

ஒருநாட்டின் ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு ஜனாதிபதியாக இருந்தால் மக்களின் தீர்வை ஏற்றுக்கொண்டிருப்பார். ஆனால், அதனை அவர் ஏற்கவில்லை. புலிகள் பற்றி பேசாவிட்டால் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று ஜனாதிபதிக்கு தெரியும். அதனால் மீண்டும் புலிக்கதை தொடங்கிவிட்டார்.

வடக்கு கிழக்கில் 60 தொடக்கம் 70 வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளார்கள். விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமலும், கடற்றொழில் செய்பவர்கள் தொழில் செய்ய விடாமல் தடுப்பதாலும் இந்த வறுமை நிலை தொடர்கின்றது.

இராணுவத்தினரிடமிருந்த காணிகளை மீண்டும் பெறும்பொருட்டு 2003ஆம் ஆண்டு 100பேர் வழக்கு தாக்கல் செய்ய வந்திருந்ததுடன், 97பேர் வழக்கு தாக்கல் செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் மக்களை ஒன்றிணைந்ததன் மூலம் 5 ஆயிரம் வழக்குகளை தாக்கல் செய்ய முடிந்துள்ளது. மக்களை ஒன்றிணைந்து தொடர்ந்து சாத்வீக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Related Posts