யாழ். நல்லூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(19) மதியம் மீன் மழை பெய்துள்ளது. மழை பெய்யும் போது பெருமளவான மீன்கள் மழையுடன் கீழே வீழ்ந்துள்ளன.
யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து வருகின்றது.
சுழல் காற்று மூலம் குளம் அல்லது கடலில் இருந்து நீர் மேல் எழும்பும் போது அதனுடன் நீரில் காணப்படும் மீன், தவளை உள்ளிட்டவையும் மேலெழும்பும்.
தொடர்ந்து, சுழல் காற்று மழையாக பெய்யும் போது நீருடன் உள்ளடங்கி சென்றவையும் மீண்டும் நிலத்தை வந்தடையும் என்பது மீன மழைக்கான விஞ்ஞான ரீதியிலான விளக்கம் ஆகும்.