ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 130 வீடுகளின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் அன்டன் யோகநாதன் எழிலரசி, இன்று ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தார்.
இந்திய வீட்டுத்திட்டத்தில் 150 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் இவ்வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டன.
இவற்றில் 20 வீடுகளுக்கான கட்டுமானப்பணிகள் முடிவடைந்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மிகுதி 130 வீடுகளின் கட்டுமானப்பணிகள், இந்த வருட இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படும்.
இதனைத்தவிர, கடந்த 2012 – 2013ஆம் ஆண்டுகளில் வடக்கு, கிழக்கு வீட்டுத்திட்டத்தின் கீழ் 319 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.