புலித் தடை நீக்கியதற்கு பின்னணி யார்?

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ள நிலையில், அதை சாராம்சமாக கொண்டு கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் இருவேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

1a(784)

2(4130)

‘ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது, ரணில் ஐரோப்பாவில் வேலையை ஆரம்பித்தார்’ என்ற வாசகத்துடன் ஒருவகையான சுவரொட்டி உரிமை கோரப்படாத நிலையில் ஒட்டப்பட்டுள்ளது.

‘புலி தடை நீக்கியது! பின்னணியில் இருக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதி யார்?’ ஏன்ற வாசகத்துடன் மற்றுமொருவகை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள பத்திரிகை உரிமைகோரியுள்ளது.

இவ்விரண்டு சுவரொட்டிகளும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை விடுதலைப்புலிகள் மீதான தடையை கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருந்நதமை குறிப்பிடத்தக்கது.

Related Posts