15.10.2014 – புதன்கிழமைஆனையிறவு உப்பளத்தின் உப்பு வயல்களது புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதன் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். ஆனையிறவு உப்பளத்திற்கு அமைச்சர் அவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, கடந்தகால நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக முற்றாக அழிந்தும், சேதமடைந்தும் இருந்த உப்பள வயல்களின் வரம்புகளைச் சீரமைக்கும் பணிகள் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கம் என்பவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், புனரமைப்புப் பணிகள் பருவ மழை தொடங்குவதற்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டுமென அமைச்சர் அவர்கள், துறைசார்ந்தோருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார். இதனடிப்படையில், தற்போது உப்பு வயல்களின் மறுசீரமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது தொடர்பில் அமைச்சர் அவர்கள் நேரில் ஆராய்ந்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.