கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான விஷால், ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் ஒரே படத்கதில் சேர்ந்து நடிக்க போகிறார்களாம். அதுவும் சம்பளம் வாங்காமல் நடிக்க போகிறார்களாம்.
இவர்கள் நடிக்கும் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக புதிய கட்டிடம் அமைப்பதற்கு தர உள்ளனராம். இது பற்றி விஷால் கூறுகையில், ஆர்யா, கார்த்தி, ஜீவா, ரவி மற்றும் நான் எல்லோரும் இணைந்து ஒரே படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் கிடைக்கும் தொகையை நடிகர் சங்க கட்டிடம் கட்ட தர முடிவு செய்துள்ளோம்.
நடிகர் சங்கத்திற்கு நிரந்தரமான கட்டிடம் கட்டுவதற்கு பணம் தேவைப்படுகிறது. அதனால் சமீபத்தில் சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தின் போது சந்தித்து கொண்ட நாங்கள் இது போன்று படம் பண்ண முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.
தற்போது சுந்தர்.சி இயக்கும் ஆம்பள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். அதனைத் தொடர்ந்து சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பின் இந்த புதிய படத்தின் பணிகளை துவங்க உள்ளனராம். இந்த 5 ஹீரோக்கள் இணையும் இந்த படத்தை யார் இயக்க போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.