போக்குவரத்து நியதிச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றது- பா.டெனிஸ்வரன்

வடக்கு மாகாணசபைக்கு என தனியான போக்குவரத்து நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக வட மாகாண போக்குவரத்து மீன்பிடி கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

deneeswaran

யாழ். மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தினரின் புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் தலைமையில் இடம்பெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

வட மாகாண போக்குவரத்து தொடர்பில் நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அவை இலங்கை அரசியலமைப்பு சரத்துக்களுக்கு ஏற்றதாக உள்ளனவா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது

இது தொடர்பாக வடமாகாண ஆளுநருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் வடமாகாணசபையில் பிரேரணையாக கொண்டு வரப்படும். இதன்மூலம் வடமாகாண போக்குவரத்து பிரச்சினைகள் தீர்க்கப்படும். அதுமட்டுமின்றி போக்குவரத்து அனுமதிப் பத்திரமும் வடமாகாணசபைக்கு ஊடாக கொடுக்க முடியும்

கடந்த காலங்களில் போக்குவரத்து தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன குறிப்பாக தனியார் பேருந்து ஊழியர்களுக்கும், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் பாரிய பிரச்சினை காணப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

அதற்காக இரு பேருந்துகளும் புறப்படும் நேரத்தினை கவனத்தில் கொள்ளப்பட்டு விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்.

உண்மையில் பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல இது மக்களுக்கு சேவை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. எனவே வடமாகாணத்தில் சிறந்த ஒரு போக்குவரத்து சேவையினை வழங்குவதே தமது பிரதான இலக்காகும் எனவே தாம் இதற்காக கட்சி பேதங்கள் மறந்து செயற்பட தயார் என தெரிவித்தார்.

இதேவேளை இன்று இடம்பெற்று வரும் யாழ்.மாவட்ட தனியார் பேருந்து சங்கத் தெரிவில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது குறித்த பதவிகளில் வருபவர்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஒழுங்கான முறைப்படியே இந்த முறை நிர்வாக தெரிவு இடம்பெற வேண்டும் என தனியார் பேருந்து ஊழியர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததன் காரணமாக பதவிகள் அனைத்தும் வாக்களிப்புக்கு விடப்பட்டே தெரிவு செய்யப்பட்டு வருகிறது.

இதேவேளை இன்று இடம்பெறும் புதிய உறுப்பினர்கள் தெரிவில் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜயரட்னவும் கலந்து கொண்டார்.

Related Posts